பதிவு செய்த நாள்
25
செப்
2015
12:09
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவிற்கு, யாசாலை பந்தல் அமைப்பதற்கு கால் நடும் விழா நடந்தது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நவ. 18ம் தேதி நடக்க உள்ளது. இந்த விழாவிற்குஎன பிரம் மாண்டமான யாசாலை அமைக்க உள்ளனர். இதற்கான பந்தக் கால் அமைக்கும் விழா, நேற்று காலை நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வாசுதாவன் தலைமை தாங்கினார். உதவி ஆணையர்கள் பிரகாஷ், மோகனசுந்தரம் முன்னிலை வகித்தனர். அறங்காவலர் குழு தலை வர் வடிவேல், தலைமை பூசாரி சேகர், அறங்காவலர்கள் ஏழுமலை, பெருமாள், காசி, சின்னதம்பி, சரவணன், மேலாளர் முனி யப்பன், மணி, அலுவலக ஊழியர்கள் சண்முகம், சதீஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பூஜைகளை சிவாச்சாரியார்கள் குலபூஷனம், டாக்டர் சாம்பமூர்த்தி ஆகியோர் செய்தனர்.