வாயுவின் புதல்வராகவும் ஸ்ரீராமரின் தூதராகவும் எங்கும் வெற்றியை அளிப்பவராகவும் பிரகாசிக்கும் ஆஞ்சநேயர். அனைவருக்கும் பொதுவானவர். ஜாதி, மத பேதமின்றி ஆண்,பெண், பெரியவர், சிறியவர் என அனைவரும், எங்கும், எப்போதும் ஆஞ்சநேயரை பூஜிக்கலாம். ஆஞ்சனேயர் மட்டுமல்ல அனைத்து தெய்வங்களையும் ஆணும், பெண்ணும், என அனைவரும் பூஜிக்கலாம். ஸ்ரீராமருடன் சேர்ந்து ஆஞ்சனேயரை பூஜித்தால் அதிகமான நன்மைகள் உண்டு.