சர்க்கரை விநாயகர் சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2015 11:10
கள்ளக்குறிச்சி: விருகாவூர் சர்க்கரை விநாயகர் சீனிவாச பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமை உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூர், சர்க்கரை விநாயகர் சீனிவாச பெருமாள் கோவிலில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பெருமாள், தாயார் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தி, சேவை, சாற்றுமுறை, ஆராதனை நடந்தது. அலங்கார தீபங்கள் வழிபாடு, மந்திரங்களை வாசித்து உபச்சார பூஜைகள், விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனைகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் கோவில் அறங்காவலர் முத்துசாமி செய்திருந்தார்.