பதிவு செய்த நாள்
13
அக்
2015
02:10
காவாங்கரை: காவாங்கரை, ராதா ருக்மணி சமேத அபயவரதப் பெருமாள் ஸ்ரீ கண்ணபிரான்
கோவிலில், வரும், 17ம் தேதி, 49ம் ஆண்டு மகா உற்சவ திருவிழா நடக்க உள்ளது. விழாவின் துவக்கமாக, 17ம் தேதி சனிக்கிழமை, காலை 7:00 மணிக்கு மேல், 8:00 மணிக்குள், மகா கணபதி ஹோமம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, மகா அபிஷேகம் மற்றும் அலங்கார
தீபாராதனை மகோற்சவம் நடக்க உள்ளது.
விழாவை சிறப்பிக்கும் வகையில், மாலை 6:00 மணிக்கு மேல், காவை நண்பர்கள் சார்பில், மாபெரும் அன்னதானம் நடக்க உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு, விழாவை சிறப்பிக்குமாறு, விழாக்குழு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.