Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இயற்கைப் பேரழிவுகளைத் தடுக்கும் ... துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்.. கங்கையில் ஆயிரம் ஆண்டு நீராடிய பலன்! துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்.. ...
முதல் பக்கம் » துளிகள்
கோயிலில் பலி பீடம் எதற்கு?
எழுத்தின் அளவு:
கோயிலில் பலி பீடம் எதற்கு?

பதிவு செய்த நாள்

16 அக்
2015
05:10

கோயிலில் கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் நாம் பலிபீடத்தை மனதார, வழிபட வேண்டும். பொதுவாக பலிபீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை மலர் வடிவம் போன்று அமைக்கப்பட்டிருக்கும். அந்த பீடங்களில் சிற்பங்கள் இருக்கும், சில கோயில்களில் வெறும் பீடம் மட்டும் இருக்கும், திருப்பதி போன்ற கோயில்களில் பலி பீடத்திற்கும் தங்கக் கவசம் சார்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் கருவறைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை பலி பீடத்துக்கும் கொடுக்கப்படுவதை அறியலாம்.

பலி பீடம் என்றதும் 90 சதவீதம் பேர் மனதில் கோழி, ஆடு ஆகியவைகளை பலி கொடுக்கும் இடமா என்ற எண்ணம் தோன்றலாம். வேத காலத்தில் நம் முன்னோர்கள் வேள்வித் தூணாகவும், விலங்குகளை பலியிடும் மேடையாகவும் இருந்தவை தான் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி இன்று கொடி மரமாகவும் பலிபீடமாகவும் உருவெடுத்துள்ளன என்கிறார்கள். இதை உறுதிப்படுத்துவது போல கிராமங்களில் இன்றும் கோயில் ஆண்டு திருவிழாக்களின் போது பலிபீட மேடையில் ஆடு, கோழிகளை பலி கொடுத்து விடுவதை பார்க்கலாம். இது தவறு, பலிபீடம் என்பது உயிர்களை பலியிட அமைக்கப்பட்டது அல்ல.

ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ள சிவன்கோயில்களிலும், வைணவத் தலங்களிலும் உள்ள பலி பீடங்கள், நம் வாழ்வை மேம்படுத்தும் ஒன்றாகப் போற்றப்படுகின்றன. அந்த கோயில்களில் உயிர்கள் பலி கொடுக்கப்படுவது இல்லை அதற்குப் பதில் நம்மிடமுள்ள மோசமான குணங்களை அங்கு பலியிட வேண்டும் என்பதுதான் தாத்பர்யம். மனிதர்களாகிய நமக்கு ஆழ்மனதில் கெட்ட குணங்கள் இருக்கும். எவ்வளவுதான் பக்குவப்பட்ட பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் மனதிலும் போட்டி, பொறாமை, காமம், குரோதம், கோபம், தாபம், சூது, வாது, வஞ்சனை, வயிற்றெரிச்சல் போன்றவைகளில் ஏதாவது ஒன்றிரண்டு நீக்க முடியாததாக இருக்கலாம். இப்படி கெட்ட குணத்துடன் கருவறைப்பகுதிக்கு நாம் சென்றால் கடவுள் நமக்கு எப்படி அருள்புரிவார்?

நம் மனது எந்த ஆசாபாசமும் இல்லாமல் தெள்ளத்தெளிவாக ஒன்றுமே இல்லாமல் சுத்தமாக வெற்றிடமாக இருந்தால்தான் இறையருள் நம்முள் இறங்கும். எதுவும் இல்லாத, எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாத மனநிலை உடையவர்களால் தான் கடவுள் பக்கம் செல்ல முடியும். எனவே நம் மனத்தில் உள்ள தீய குணங்களை எல்லாம் வெளியேற்ற வேண்டும். அதாவது கெட்ட நினைவுகளை பலிகொடுக்க வேண்டும். இது கோயில் வழிபாட்டில் மிகவும் முக்கியமானது. இப்படி நம் கெடுகுணங்களை பலியிடும் ஆன்மிகப் பலி பீடமானது உயரிய தன்மையைக் கொண்டது, பலி பீடத்தை அமைப்பதற்கு என்று விதிகள் உள்ளன. பலி பீடத்தின் உயரம் மூல ஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவரின் பீடத்தின் உயரத்துக்குச் சமமாக இருக்க வேண்டும். பலி பீடத்தில் பாதுகா, ஜகதி, குமுதம், குமுதப்பதிகம், கலாகம்பம், நிதிரவம், சுபோதம், அசுரபத்தி, பதுமம் என்று பல வகைகள் உள்ளன. பலி பீடத்தைப் பொதுவாக பத்ர லிங்கம் என்று அழைப்பார்கள்.

பலி பீடம் அருகில் இருக்கும் நந்தி எனும் ஆன்மாவில் உள்ள ஆணவ மலம், பலி பீடத்தில்தான் ஒதுங்கியிருக்கும். எனவே பலி பீடம் அருகே சென்றவுடன் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மும்மலங்களையும் பலியிடுதல் வேண்டும். நான் என்ற அகங்காரத்தைப் பலியிட வேண்டும். சிலர் எல்லாமே நம் ஒருவரால்தான் நடக்கிறது. என்ற இறுமாப்புடன் இருப்பார்கள். அந்த இறுமாப்பை பலிபீடம் அருகில் நின்று பலியிடவேண்டும். பிறகு பலிபீடம் அருகில் தரையில் விழுந்து வணங்க வேண்டும்.

அந்த வழிபாடு எப்படி இருத்தல் வேண்டும்?

கோயிலின் கருவறை வடக்கு, மேற்கு திசையைப் பார்த்தபடி இருந்தால், பலி பீடத்தின் இடது பக்கத்திலும், கருவறை கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி இருந்தால் பலி பீடத்தின் வலது பக்கத்திலும் நின்று வணங்க வேண்டும். மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் போதோ அல்லது சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கும்போதோ பலி பீடத்தை வழிபடுதல் கூடாது. அதுபோல பலிபீட வழிபாட்டை ஒருமுறை, இரண்டு தடவை மட்டும் செய்துவிட்டு, நிறுத்தி விடக்கூடாது. 3.5.7.9,12 என்ற எண்ணிக்கையில் வணங்க வேண்டும். அந்த சமயத்தில் நம்மிடம் உள்ள காம, குரோத, லோப மோக, மத, மாச்சரியம் எனும் ஆறு கெட்ட குணங்களை பலியிடுவதாக உறுதி செய்து கொள்ள வேண்டும். பின்னார் நல்ல மனநிலையுடன் கருவறை அருகில் சென்று இறைவனை வழிபடும் போது, அவர் அருள் நம்மை ஆக்கிரமிக்கும், ஆசிர்வதிக்கும், பலி பீடத்தை பலிநாதர் என்றும் சொல்வார்கள். சைவ சித்தாந்தம் கூறும், பசு, பதி, பாசம் ஆகிய மூன்றில் பாசத்தைக் காட்டுவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது என்பார்கள். பலி பீடத்துக்கு மாயச் சக்கரம் என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது நமது பிறப்பு - இறப்பு எனும் மாயச்சக்கரமாக பலி பீடத்தைக் கருதுகிறார்கள். இதைச் சுற்றி வந்து வழிபட்டால் ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களில் இருந்து என்னை விடுவித்து விடு என்று வேண்டுவதற்குச் சமமாகும்.

பொதுவாக கோயில்களில் எட்டு மூலைகளில், எட்டு பலி பீடங்கள் அமைத்திருப்பார்கள். அவை இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன் ஈசானன் எனும் எட்டு திக்பாலகர்களை உணர்த்துகிறது. திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது எட்டு திசைகளிலும் இந்தப் பெயர்களில் அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ளன. இந்த எட்டு திக்பாலகர்கள் கோயில் பரிவார தேவதைகள் ஆவார்கள். எனவே இவர்களுக்கு அன்னம். தீர்த்தம் இடுதல் போன்றவைகளுக்கு பலி பீடங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த எட்டு பலி பீடங்களும் ஒவ்வொரு கோயிலின் ஆகமவிதிகளுக்கு ஏற்ப கோயில் பிரகாரங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்குத் தலைமை பலிபீடமாக நந்தி பின்புறம் உள்ள பலிபீடம் அமையும். பொதுவாக தலைமை பலிபீடம் மூலவ மூர்த்தியின் பாதங்களை தாமரை வடிவில் தாங்கியதாக இருக்கும். சில கோயில்களில் பலி பீடத்தின் அடியில் பக்தர்கள் உப்பும் மிளகும் போட்டுச் செல்வார்கள். உப்பாகிய உடம்பையும் மிளகாகிய ஆணவத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து விட்டேன் என்பதையே இது காட்டுகிறது. சக்தி தலங்களில் தலைமை பலி பீடம் தவிர பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி, எனும் சப்த மாதர்களை உணர்த்தும் பலிபீடங்களும் அமைத்திருப்பார்கள் அந்த பலி பீடங்களையும் மறக்காமல் வழிபட வேண்டும்.

 
மேலும் துளிகள் »
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
ஆடிமாதம் அம்மனுக்குத்தான் உரியது என்றாலும் ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் ... மேலும்
 
temple news
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் ஆடி மாதத்தின் ... மேலும்
 
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். திதிகளில் ஆறாவது திதியாக வருவது ஆறுமுகனுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar