பதிவு செய்த நாள்
20
அக்
2015
10:10
கன்னிவாடி: கன்னிவாடி அருகே கசவனம்பட்டியில் மவுனகுரு சுவாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஐப்பசி மூல நட்சத்திரத்தில், குரு பூஜை விழா நடக்கும். இந்தாண்டு விழா, நேற்று முன்தினம் துவங்கியது. மாலையணிந்த பக்தர்கள், சிவனூரணி, திருமலைக்கேணி, சுருளி, காசி, ராமேஸ்வரம், கொடுமுடி, சதுரகிரியில் இருந்து புனிதநீர் எடுத்து வந்திருந்தனர். இரவு வரை தொடர் தீர்த்தாபிஷேகம் நடந்தது. காசி, ராமேஸ்வரம், அமர்நாத், பத்ரிநாத் உள்பட பிறமாநிலங்களில் இருந்து ஏராளமான சாதுக்கள் வந்திருந்தனர். முக்கிய நிகழ்ச்சியான குருபூஜை, நேற்று மகா யாகத்துடன் துவங்கியது. யாக தீர்த்தாபிஷேகம், 108 படி பாலாபிஷேகம், சோடஷ அபிஷேகத்துடன் மூலவர் மற்றும் உற்சவருக்கு விசேஷ மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.