லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2015 10:10
திண்டிவனம்: தீவனூர் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி ஐந்தாம் சனிக்கிழமையையொட்டி, சுவாமி வீதியுலா நடந்தது. திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதத்தையொட்டி, சுவாமிக்கு நாள்தோறும் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கின்றது. புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி, காலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு, லட்சுமி நாராயண பெருமாள், வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து இரவு ஸ்ரீதேவி, பூதேவி நாராயண அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகத்தா முனுசாமி செய்திருந்தார்.