பதிவு செய்த நாள்
20
அக்
2015
11:10
மைசூரு: வருகிற, 23ம் தேதி, விஜயதசமி தினத்தில் நடக்கும், ஜம்பு சவாரி அணிவகுப்பை, ஆயுர்வேத கல்லுாரி வளாகத்தில் இருந்து கண்டுகளிக்க, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு, இலவச பாஸ் வழங்கப்படவுள்ளது.மைசூரு தசராவின் ஒரு பகுதியாக, வரும், 23ம் தேதி ஜம்பு சவாரி நடக்கிறது. இதை, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், எவ்வித சிரமுமின்றி கண்டுகளிக்கும் வகையில், ஆயுர்வேத கல்லுாரி வளாகத்தில், 2013 முதல், மைசூரு கல்பவிருக் ஷா அறக்கட்டளை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்து வருகிறது.இரண்டாயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு அமர்ந்து அணிவகுப்பை காணலாம். இவர்களுக்கு இலவசமாக குடிநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். இது தவிர, அணிவகுப்பு குறித்து, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கில மொழிகளில், வர்ணனை செய்யவும் ஏற்பாடு செய்யப்படும்.மைசூரின் சரித்திரம் மற்றும் பாரம்பரியமிக்க தசரா திருவிழா குறித்த விளக்கங்கள் அடங்கிய, 16 பக்க வண்ண புத்தகமும் வழங்கப்படுகிறது. இதனுடன் இலவச பாஸ் இணைக்கப்பட்டிருக்கும். கடந்த, 2013ல் தசரா திருவிழாவின் போது, 82 நாடுகளில் இருந்து, 1,260 சுற்றுலா பயணிகளும், 2014ல், 67 நாடுகளிலிருந்து, 1,378 சுற்றுலா பயணிகள் வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.