பதிவு செய்த நாள்
22
அக்
2015
11:10
சேலம்: நவராத்திரி விழாவை முன்னிட்டு, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், லலிதா சகஸ்ரநாம ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, இன்று மாலை மகிஷாசுர வதம் நிகழ்ச்சியும், அர்ச்சனை செய்யப்பட்ட குங்கும பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. புரட்டாசி மாதத்தில் துவங்கும் நவராத்திரியை, சாரதா நவராத்திரி என வழிபடுவது வழக்கம். சிறப்பு வாய்ந்த இந்த நவராத்திரி விழாவையொட்டி, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், அக்.,13ம் தேதி முதல், குங்கும லட்சார்ச்சனை நடந்து வருகிறது. இதில், நேற்று, 108 சிறப்பு மூலிகைகளை கொண்டு, லலிதா சகஸ்ரநாம சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. இதையொட்டி, ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு, சிறப்பு அபிசேகம் மற்றும் பூஜை நடந்தது. இன்று மாலை, 6 மணிக்கு, மகிஷாசுர வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அம்மன் அசுரனை வதம் செய்யும் நிகழ்வினை, தத்ரூபமாக நடத்திக் காட்ட உள்ளனர். தொடர்ந்து, நவராத்திரியில், நடத்தப்பட்ட லட்சார்ச்சனை குங்கும பிரசாதம், 5,000 பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.