புதுச்சேரி: முத்தியால்பேட்டை வேலாயுதப்பிள்ளை நகரில் உள்ள பொன்னு மாரியம்மன் கோவில் நவராத்திரி விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு அபி ஷேகம், இரவு 8:00 மணியளவில் அம்பு போடுதல் நிகழ்ச்சி, மின் அலங்காரத்துடன் அம்மன் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங் காவலர் குழுவினர் மற்றும் உபயதாரர்கள் செய்தனர்.