காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2015 11:10
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் நவராத்திரி விழா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மன் ராஜராஜேஸ்வரி, மூகாம்பிகை, லட்சுமி, மீனாட்சி, சக்தி, ஞானப்பால், சிவபூஜை, கருமாரியம்மன், சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினசரி இரவு 7 மணிக்கு அலங்கார தீபம் நடந்தது. நேற்று இரவு 8 மணிக்கு அம்பு போடுதல் நிகழ்ச்சி நடந்தது.