செஞ்சி: சிங்கவரம் குமராத்தம்மன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு நடந்து வந்த மகா சண்டி ஹோமம் நிறைவு விழா நடந்தது. செஞ்சியை அடுத்த சிங்கவரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான குமராத்தம்மன் கோவிலில் உள்ளது. இங்கு நவராத்திரி விழாவை முன்னிட்டு மழை வேண்டியும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும், விவசாயம் செழிக்கவும் கிராம மக்கள் சார்பில் கடந்த 13ம் தேதி முதல் மகா சண்டி ஹோமம் செய்து வந்தனர். இதன் நிறைவு நாள் விஜயதசமியான நேற்று முதினம் காலை நடந்தது. காலை 10:00 மணிக்கு கலச பிரதிஷ்டையும், விநாயகர் பூஜையும், மகா சண்டி ஹோமமும், பகல் 12:00 மணிக்கு பூர்ணாஹூதியும் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு ஹோமத்தில் வைக்கப்பட்ட கலச நீர் கொண்டு, அம்மனுக்கு அபிஷேகமும் செய்தனர். சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.