பதிவு செய்த நாள்
24
அக்
2015
11:10
சேலம்: சேலம், முல்லை நகர் ஷீரடி சாய்பாபா பிரார்த்தனை ஸ்தலத்தில், விஜயதசமி மற்றும் ஷீரடி பாபாவின் முக்தி தினத்தையொட்டி, பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பாபாவை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். ஷீரடி பாபா முக்தி தினத்தை முன்னிட்டு, கடந்த, 15ம் தேதி முதல் தொடர்ந்து, 7 நாள் நாம சப்தாகம் நடந்தது. பின்னர், பாபா பளிங்கு சிலைக்கு சிறப்பு அபி?ஷகம் செய்து, பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, விஷ்ணு சகஸ்ர நாமம், அனுமன் சாலீஷா, குரு ஸ்தோத்ர பாராயணம் செய்யப்பட்டது. டாக்டர் விஜயலட்சுமி குழுவினரின் சாய் பஜன், வீணை கச்சேரி நடந்தது. மாலை, 4 மணிக்கு ஆத்ம ஜோதி ஏற்றப்பட்டது. குருகுல குழந்தைகளின் நாட்டிய நிகழச்சி நாத சங்கமம் நடந்தது.