பதிவு செய்த நாள்
26
அக்
2015
12:10
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, தென் பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில், நேற்று நடந்த, பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஆத்தூர் அருகே, தென் பொன்பரப்பி கிராமத்தில், சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, 5.5 அடி உயரத்தில், 16 முகங்கள் கொண்ட காந்தக் கல்லால் ஆன லிங்கம் உள்ளது. பிரதோஷ நாட்களில், சொர்ணபுரீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று, பிரதோஷத்தையொட்டி, சொர்ணபுரீஸ்வரர் மற்றும் நந்தி தேவருக்கு, பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் என, 16 வகையான அபிஷேகம் நடந்தது. பின், சொர்ணபுரீஸ்வரர், நந்தி தேவர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், வீரகனூர், நாவக்குறிச்சி உள்ளிட்ட சிவன் கோவில்களிலும், சிறப்பு பூஜைகள் நடந்தது.