திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு பாதாள பொன்னியம்மன் மயானகாளி கோவிலில் பவுர்ணமி உற்சவம் நடந்தது. திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டு கிராமத்தில் பாதாள பொன்னியம்மன் மயானகாளி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு உற்சவம் நடந்தது. காலை 6:00 மணிக்கு காளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5:30 மணிக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. மண்ணாடிப்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு முத்துப் பல்லக்கில் காளியம்மன் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை பிரபு மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.