பதிவு செய்த நாள்
30
அக்
2015
11:10
சென்னை: கும்பகோணம் மகாமக திருவிழாவையொட்டி, அரசு சார்பில், புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.கும்பகோணம் மகாமக திருவிழா, 2016 பிப்., 22ல் நடைபெற உள்ளது. இதற்கான இணையதளத்தை துவக்குவது என, செப்டம்பரில் தலைமைச் செயலர் தலைமையில் நடந்த, ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது; அதன்படி, www.online.thanjavur.com/mahamagam என்ற இணையதளம் துவங்கப்பட்டு உள்ளது. இதை, கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில், தஞ்சாவூர் கலெக்டர் சுப்பையன் துவக்கி வைத்தார். இணையதளத்தில், கும்பகோணத்தில் உள்ள தங்குமிடம், கோவில்களின் தல வரலாறு, தமிழக அரசு செய்துள்ள முன்னேற்பாடுகள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.