பதிவு செய்த நாள்
12
நவ
2015
12:11
குன்னுார்: குன்னுார் மல்லிக்கொரை கிராமத்தில், ஈரமாசி எத்தையம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது. குன்னுார் அருகே மல்லிக்கொரை கிராமத்தில், செல்வ விநாயகர், ஈரமாசி எத்தையம்மன், நவகிரக நாயகர்கள் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வரும், 15ம் தேதி காலை, 9:00 மணிக்கு, பிக்கட்டி சற்குரு நாத மகா முனிவர் ராஜயோக மடாலய தலைவர் சுப்ரமணியசாமி தலைமையில் நடக்கிறது. முன்னதாக, 14ம் தேதி பிற்பகல், 2:00 மணிக்கு, புனித கங்கை நீர் கொண்டு வருதல், மாலை, 4:00 மணிக்கு கலச கும்ப பிரதிஷ்டை, தொடர்ந்து முதல் கால யாக பூஜை, இரவு, 8:00 மணிக்கு விக்ரக பிரதிஷ்டை, மருந்து சார்த்துதல் நடக்கின்றன. 15ம் தேதி, இரண்டாம் கால யாக பூஜையை தொடர்ந்து, கும்பாபிஷேகத்தின் நிறைவாக அபிஷேக ஆராதனை, பஜனை ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. பிற்பகல் 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் ஊர் பொதுமக்கள் மேற்கொண்டுள்ளனர்.