பதிவு செய்த நாள்
14
நவ
2015
11:11
டேராடூன்: குளிர்காலம் துவங்கியதை அடுத்து, இமயமலையில் உள்ள, கேதார்நாத் சிவன் கோவில், யமுனோத்ரி அம்மன் கோவில்களின் நடைகள் சாத்தப்பட்டன. இமயமலையில் அமைந்துள்ள, உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கேதார்நாத், யமுனோத்ரி கோவில்கள், மிகவும் பிரசித்தி பெற்றவை. குளிர்காலம் துவங்கியதையடுத்து, இந்த கோவில்களில், நேற்று நடைகள் சாத்தப்பட்டன. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில், 2,000க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கேதார்நாத் கோவிலின் உற்சவர் சிலை, மலை மேல் உள்ள, ஓம்காரேஸ்வரர் கோவிலுக்கும்; யமுனோத்ரி கோவிலின் உற்சவர் சிலை, கர்சலி கோவிலுக்கும் பல்லக்கு மூலம் கொண்டு செல்லப்பட்டன. குளிர் காலம் முடிந்த பின், உற்சவ மூர்த்தி சிலைகள் மீண்டும் கொண்டு வரப்படும்.