தனுஷ்கோடி ஜடாயு தீர்த்த கோயில் நவ.18ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2015 11:11
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி உபகோயிலான ஜடாயு தீர்த்த சிவன் கோயிலில், நவ., 18ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. ராமாயண காவியத்தில் தொடர்புடைய ராமேஸ்வரம் திருக்கோயிலில் அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி உபகோயிலான ஜடாயு தீர்த்த சிவன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக ரூ. 4 லட்சத்தில் திருப்பணி நடந்தது. பணிகள் முடிந்த நிலையில், நவ., 17 காலை, ஜடாயு தீர்த்த கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. நவ., 18 காலை7.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள் முடிந்ததும், அன்று காலை 7. 30 மணிக்கு கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.