தேனூர்: சோழவந்தான் தேனூர் சுந்தரவள்ளியம்மன் கோயிலில் நடந்த புரட்டாசி பொங்கல் திருவிழாவில் முளைப்பாரி எடுத்து பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். தேனூர் கிராம கமிட்டி விழா குழுவினர் சார்பில் கொடியேற்றத்துடன் திருவிழா நடந்தது. இக்கோயிலில் நேற்று முன்தினம் நுõற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம், அக்கினிச்சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் பெண்கள் பொங்கல் படைத்து தரிசித்தனர். நேற்று முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வைகை ஆற்றில் கரைத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. . சர்வஅலங்காரத்தில் அம்மன் வீதியில் எழுந்தருள, வழிநெடுக பக்தர்கள் திரண்டு அம்மனை தரிசித்தனர்.