பதிவு செய்த நாள்
17
நவ
2015
12:11
கருமத்தம்பட்டி: பெரிய மோப்பிரிபாளை யம் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது; ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கருமத்தம்பட்டி அடுத்த பெரிய மோப்பிரிபாளையம் செல்வநாயகி அம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்து, 13ம்தேதி கும்பாபிஷேக விழா துவங்கியது. காலை, 7:00 மணிக்கு கணபதி, நவக்கிரக ஹோமம் நடந்தது. வாஸ்து சாந்தி, காப்பணிதல், முதற்கால ஹோமம், 14ம் தேதி மாலை, 5:00 மணிக்கு நடந்தது. நேற்று காலை, 6:30 மணிக்கு நான்காம் கால ஹோமம், பூர்ணாகுதி முடிவுற்று, பூஜிக்கப்பட்ட கலசங்கள் கோவிலை வலம் வந்தன. காலை, 9:15 முதல், 10:15 மணிக்குள், விமானம் மற்றும் செல்வநாயகி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேக, அலங்கார பூஜையும் அன்னதானமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை, திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.