கீழக்கரை: உத்தரகோசமங்கை அருகே வைகை கிராமத்தில் செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. பாதாள காளியம்மன், கால சம்ஹார மூர்த்தி, விலாவடி கருப்பண்ண சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. 68 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் கும்பாபிஷேகத்திற்காக பரமக்குடி, சிவகங்கை, காளையார்கோயில், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.