விழுப்புரம்: விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் ஆனந்த வரதராஜ பெருமாள் கோவிலில் திருவோண திருமஞ்சனம் நடந்தது. விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஆனந்த வரதராஜ பெருமாள் கோவிலில் திருவோணத்தை யொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, 10:00 மணிக்கு திருவோண திருமஞ்சனம், 11:00 மணிக்கு மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி தாயாரோடு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டாண்மை ஜெயபால் தலைமையில், அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.