பதிவு செய்த நாள்
20
நவ
2015
11:11
மதுரை: ராமநாதபுரம் தேவிபட்டினம் நவபாஷாணம் கோயிலுக்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள பாலத்தை, கோயில் நிர்வாக அதிகாரியிடம், ஊராட்சி நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும்,’ என, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது. தேவிபட்டினம் முருகேசன் தாக்கல் செய்த பொதுநல மனு: தேவிபட்டினம் கடலில், நவக்கிரகங்களின் விக்கிரகங்கள் சுயம்புவாகத் தோன்றி உள்ளன. பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலித்து, மதச் சடங்குகள் மேற்கொள்கின்றனர். கோயிலுள்ள இடம், தேவிபட்டினம் ஊராட்சிக்கு சொந்தமானது. நவபாஷாணத்தில் கழிவுநீர் கலக்கிறது. பல வரிகள் மூலம் ஊராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது. கோயில் அருகே தேங்கிய கழிவுகளை சுத்தம் செய்ய, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, முருகேசன் மனு செய்திருந்தார். நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் அமர்வு விசாரித்தது. வழக்கறிஞர் கமிஷனர் சங்கரன் தாக்கல் செய்த அறிக்கை: பக்தர்கள் ஆடைகளை விட்டுச் செல்வதால் கடல் மாசுபடுகிறது. விழிப்புணர்வு தேவை. மின்விளக்கு வசதி செய்ய வேண்டும். குப்பைகளை அடிக்கடி அப்புறப்படுத்த வேண்டும். நுழைவுவாயில் கழிப்பறையை, வேறு இடம் மாற்ற வேண்டும். கழிவு நீர், கடலில் கலப்பதை தடுக்க ÷ வண்டும். பெண்கள் ஆடைகள் மாற்ற அறை வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள், ‘வழக்கறிஞர் கமிஷனரின் பரிந்துரைகளை நிறை÷ வற்றும் சாத்தியக்கூறு குறித்து டிச.,3 ல் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கோயிலுக்கு செல்ல அமைக்கப்பட்ட பாலத்தை, கோயில் நிர்வாக அதிகாரியிடம், ஊராட்சி ஒப்படைக்க வேண்டும்,’ என்றனர். அரசு வழக்கறிஞர்கள் சண்முகநாதன், ஆயிரம் செல்வகுமார் மற்றும் மனுதாரர் வழக்கறிஞர் மெல்டியூ ஆஜராயினர்.