பாலிதீன் பைகளில் உணவுகள் விலங்குகளுக்கு வழங்கக்கூடாது: பக்தர்களுக்கு வேண்டுகோள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2015 12:11
கூடலூர்: சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பாலிதீன் பைகளுக்குள் வைத்து உணவுப் பொருட்களை குரங்குகளுக்கு வழங்கக்கூடாது என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் தினமும் வாகனங்களில் சபரிமலைக்கு செல்கின்றனர். இப்பாதை நீண்ட வனப்பகுதி வழியாக செல்வதால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள், நடுவழியில் வாகனங்களை நிறுத்தி வனப்பகுதிக்குள் அமர்ந்து உணவு சாப்பிடுகின்றனர். அப்போது, சுற்றிச்சுற்றி வரும் குரங்குகளுக்கு பாலிதீன் பைகளுடன் டன் உணவுப் பொருட்களை கொடுக்கின்றனர். இதை வனப்பகுதிக்குள் குரங்குகள் எடுத்துச் செல்லும்போது மற்ற வனவிலங்குகளும் அதை பறித்து உண்ணும். இதனால் குரங்குகள் உட்பட பல விலங்குகள் உயிரிழக்க வாய்ப்புகள் அதிகம். அதனால், பிளாஷ்டிக் மற்றும் பாலிதீன் பைகளை சபரிமலைக்கு கொண்டு வருவதையும், அவற்றில் மிச்சப்படும் உணவுப் பொருட்களை வைத்து வனப்பகுதிக்குள் வீசி எறிவதையும் பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என தமிழக மற்றும் கேரள வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.