பதிவு செய்த நாள்
30
நவ
2015
12:11
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், சேக்கிழார் புனித பேரவை சார்பில், உழவார பணி நேற்று நடைபெற்றது.
கருவறை, அர்த்த மற்றும் முன் மண்டபம், கொடி மரம், தீப ஸ்தம்பம், சபா மண்டபம், திருக்கல்யாண உற்சவ மண்டம், உள், வெளி பிரகாரம், கனகசபை ஆகிய இடங்களில், தண்ணீர் ஊற்றி, சுத்தம் செய்யப்பட்டது. மேலும், விளக்கு, பிரபாவளையம் உள்ளிட்ட பூஜைக்கு பயன்படும் பொருட்களும் சுத்தம் செய்யப்பட்டன. பேரவை தலைவர் முத்து நடராஜன் மற்றும் உறுப்பினர்கள், உழவார பணியில் பங்கேற்றனர்.