பதிவு செய்த நாள்
05
டிச
2015
10:12
பண்ருட்டி: பண்ருட்டி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் மகா சம்ப்ரோஷணம் (6ம் தேதி) நடக்கிறது. விழாவை முன்னிட்டு கடந்த 2ம் தேதி காலை, முதல் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று முன்தினம் (3ம் தேதி) காலை புண்யாஹம், உக்த ஹோமங்கள், மாலை 5:30 மணிக்கு பிரதான ஹோமம் நடந்தது. நேற்று (4ம் தேதி) காலை 8:00 மணிக்கு விமான கோபுர கலசம் படிய வைத்தல், அஷ்டபந்தனம் சாத்துதல், ஹோமம், மாலை அக்னி பி ரணயனமும் நடந்தது. இன்று (5ம் தேதி) மகாசாந்தி ஹோமமும் மாலை திருமஞ்சனம், சயனாதிவாசம் நடக்கிறது. தொடர்ந்து நாளை (6ம் தேதி) காலை 6:00 மணிக்கு கோ பூஜையும், யாத்ராதானம், கடம் புறப்பாடாகி காலை 8:45 மணிக்கு விமானங்கள், ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடக்கிறது. 9:00 மணிக்கு கருவறை மூர்த்திகளுக்கு மகா சம்ப்ரோஷணம், கற்பூர ஆரத்தி பிரம்மகோஷம், சாற்றுமுறை சர்வதரிசனம், இரவு 7:00 மணிக்கு பெருமாள் கருடவாகன தரிசனத்தில் வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் உபய தாரர்கள் செய்து வருகின்றனர்.