காரைக்கால்: காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில் மையாடுங்கண்ணி அம்பாள் உடனமர் ஜடாயுபுரீஸ்வர சுவாமி கோவில், மெய்கண்ட விநாயகர் ஆலயம், நிர்த்தன காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கொட்டும் மழையில் நடந்தது. இதையொட்டி கடந்த 3ம் தேதி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று யாக சாலைகள் முடிந்து ராஜகோபுரம், ஜடாயுபுரீஸ்வர், அஞ்சனாட்சி அம்மன், அஷ்டாதசபுஜ மகாலட்சுமி, துர்க்கை சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.