திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் ஏகாதசி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2015 11:12
கீழக்கரை: வைணவ திவ்ய தேசங்கள் 108ல் 44வது இடத்தில் உள்ளது திருப்புல்லாணி பத்மாஸனித்தாயார் சமேத ஆதிஜெகநாத பெருமாள் கோயில். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியது. இங்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிச., 11 முதல் 20 வரை பகல் பத்து நிகழ்ச்சியும், 21 முதல் 30 வரை ராப்பத்து நிகழ்ச்சியும் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் திருவாய்மொழி பாடப்பட்டு, பகவத் சங்கல்ப பூஜைகள், பெருமாள் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிச., 21 இரவு 7:00 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. பெருமாள் ராஜ அலங்காரத்தில் சொர்க்கவாசலை கடந்துவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.