சபரிமலை: சபரிமலையில் மழை தொடர்கிறது. மண்டல சீசன் ஆரம்பமான நாள் முதல் தினமும் மதியத்துக்கு பின்னர் மழை பெய்து வருகிறது. சில நாட்களில் இரவிலும் பெய்தது. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை பத்து மணி வாக்கில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இடைவெளி விட்டு இரவு வரையிலும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பக்தர்கள் சிரமப்பட்டனர்.