சபரிமலை: நீண்ட இடைவெளிக்கு பின்னர் சபரிமலையில் நேற்று வெயில் சுட்டெரித்தது. தொடர் மழை ஓய்ந்ததால் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.நவ.17 மண்டலகாலம் ஆரம்பமான நாள் முதல் ஓரிரு நாட்களை தவிர்த்தால், சபரிமலையில் எல்லா நாட்களிலும் மழை பெய்தது. அதுவும் மதியத்துக்கு பின்னர்தான் மழை கொட்டி தீர்த்தது. இதனால் இரவு நேரத்தில் தங்க வசதி இல்லாமல் பக்தர்கள் சிரமப்பட்டனர்.இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டம் இல்லாமல் வெட்ட வெளிச்சத்துடன் காணப்பட்டது. பகலில் நல்ல வெயில் அடித்தது. மாலையிலும் நல்ல வெப்பம் இருந்தது. மழைக்கான அறிகுறிகள் இல்லை. இதனால் பக்தர்கள் திறந்த வெளிகளில் தங்கினர்.