மேச்சேரி: அமாவாசையை முன்னிட்டு இன்று மேச்சேரி பத்ரகாளியம்மனுக்கு, ராஜராஜேஸ்வரி சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலுக்கு மாதம் தோறும் அமாவாசை நாளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வருவது வழக்கம். இதனால், மாதம்தோறும் அமாவாசை நாளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். அமாவாசை நாளான இன்று பத்ரகாளியம்மனுக்கு, ராஜராஜேஸ்வரி சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.