பனைக்குளம்: அரியமான் உக்கிர பிரத்யங்கிரா தேவி கோயில் கும்பாபிஷேகம் அக்., 26 நடந்தது. நேற்று மண்டல பூஜை நடைபெற்றது. யாகசாலை பூஜை காலை 7:30 முதல் 11 மணி வரை நடந்தது. ருத்ர பூஜை, சிவபுராணம், மகாசக்தி ஸ்தோத்திரம் அர்ச்சனைகள் நடந்தன. பின் 108 சங்குகளில் புனித நீர் நிரப்பி கோயிலை வலம் வந்து மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. உத்தரகோசமங்கை முத்துக்குமார் சிவாச்சாரியார், பாதரக்குடி ரவீந்திர சுவாமிகள் பூஜைகளை செய்தனர்.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் பழனிவேலு, வார வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர். அன்னதானம் நடந்தது.