பரமக்குடி சிவன் கோயில்களில் டிச., 26 ல் ஆருத்ரா தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2015 12:12
பரமக்குடி; பரமக்குடி ஈஸ்வரன் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில்களில் டிச., 26 அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. பரமக்குடி சந்திரசேகரசுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் டிச., 17 இரவு 7 மணிக்கு மாணிக்கவாசக சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கும். தினமும் காலை மாணிக்கவாசகர் ஆடி வீதி புறப்பாடு, மாலையில் திருவெம்பாவை வாசித்தல், தீபாராதனை நடக்கும். டிச., 25 இரவு 7 மணிக்கு உற்சவர் நடராஜமூர்த்தி பச்சை சாத்தி புறப்பாடுடன்,கோயில் கொடிமரம் முன் மகாமண்டபத்தில் ஆனந்த தாண்டவம் ஆடும் நிகழ்ச்சி நடக்கிறது. டிச., 26 அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் நடக்கும், தொடர்ந்து அருணோதயத்தில் ஆருத்ரா தரிசனம் நடக்கும். அன்று காலை 10 மணிக்கு உற்சவர் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் புஷ்பக விமானத்தில் வீதியுலா நடக்கும். அதேபோல் மீனாட்சி அம்மன் கோயிலில் உற்சவர் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், வீதியுலாவும் நடக்கும்.