பதிவு செய்த நாள்
14
டிச
2015
12:12
திருத்தணி: அனுமந்த சுவாமி கோவிலில், நேற்று, 84வது ஆண்டு குரு பூஜை நடந்தது. திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடுகுப்பம் கிராமம் அருகே செல்லும் கொற்றலை ஆற்றின் ஓரத்தில், அனுமந்த சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, 84வது ஆண்டு குருபூஜை நடந்தது. இதையொட்டி, கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, ஐந்து கலசங்கள் வைத்து, சிறப்பு ஹோமம் நடந்தது. காலை 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பஜனை பாடல்கள் பாடப்பட்டன. இதில் ஆற்காடுகுப்பம், லட்சுமாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.