பதிவு செய்த நாள்
14
டிச
2015
12:12
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் கோவிலில், 1,008 சங்காபிஷேகம், இன்று நடைபெறுகிறது.திருக்கழுக்குன்றம் மலைக்குன்றில் அமைந்துள்ள இந்த கோவிலில், கார்த்திகை மாத சோமவார திங்கட்கிழமையான இன்று, பிற்பகல், 1,008 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.இதையொட்டி, காலை, 7:15 மணிக்கு, சங்குகளில் புனிதநீர் நிரப்பி, மலர்களால் அலங்கரித்து, 9:30 மணிக்கு யாகசாலை பூஜை துவங்குகிறது. அதை தொடர்ந்து, பகல், 2:00 மணிக்கு மகா தீபாராதனையும், பிற்பகல் 2:30 மணிக்கு, புனிதநீரால் இறைவனுக்கு சங்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.