கடலூர்: கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை 4வது சோமவாரத்தையொட்டி சிறப்பு யாகம் மற்றும் 108 வலம்புரி சங்கு பூஜை நடந்தது. கார்த்திகை மாதம் சிவபெருமானுக்கு பூஜைக்கு உகந்த மாதமாகும். மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் இந்த வேத மந்திரங்கள், ருத்திர மகா மந் திரம் உச்சரித்து கலச பூஜை செய்வது வழக்கம். நேற்று கார்த்திகை 4வது சோமவாரத்தையொட்டி கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் யாகம் வளர்க்க ப்பட்டு, 108 வலம்புரி சங்குகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வெள்ளிக் கலசங்கள் மற்றும் 108 வலம்புரி சங்குகளில் புனித நீர் கொண்டு பூஜை செய்யப்பட்டது. நாகராஜ் சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் ஓதப்பட்டு பூஜை செய்தனர். பின்னர் பூஜிக்கப்பட்ட கலசங்களில் நீர், சங்குகளில் உள்ள புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதையொட்டி நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர்.