பதிவு செய்த நாள்
15
டிச
2015
11:12
உடுமலை: திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபி ேஷகம், ஜனவரி இறுதி வாரம் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்தப் படும், என, அமணலிங்கேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் தெரிவித்தார். உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், திருமூர்த்தி மலை அமைந்துள்ளது. இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்கள் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கும் பிரசித்தி அமணலிங்÷ கஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம், 2002ம் ஆண்டு நடத்தப்பட்டது. கும்பாபிேஷகம் நடந்து, 13 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோவில் கும்பாபிேஷகம் வரும் பிப்ரவரி மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அமணலிங்கேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் வெற்றிச் செல்வன் கூறுகையில்,“கோவில் கும்பாபிேஷக பணி ஓரிரு நாட்களில் துவக்கப்படும். கும்பாபிேஷகம் முன்னிட்டு அமணலிங்÷ கஸ்வரர் சன்னதி, விநாயகர் சன்னதி, முருகன் சன்னதிகள் மராமத்து செய்யப்படுகின்றன. வர்ணம் பூசுதல், கூரைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை ஜனவரி மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும். ஜனவரி இறுதி வாரம் அல்லது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் கும்பாபிேஷகம் நடத்தப்படும், என்றார்.