வேலுார்,:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில், அரியாத்தம்மன் கோவில் உள்ளது. கடந்த ஆண்டு, மார்ச், 17ல், இக்கோவிலுக்கு, கேரள மாநிலம், பாலக்காட்டு தந்திரிகள் சிலர் பிரசன்னம் பார்த்தனர். அவர்கள் கூறியபடி, நேற்று முன்தினம், கோவில் கிணற்றை துார் வாரியபோது, சிவலிங்க கற்சிலை கிடைத்தது. முக்கால் அடி உயரமும், ஒரு அடி அகலமும் கொண்டதாக இச்சிலை உள்ளது. இதனுடன், ஐந்து சிறிய விநாயகர் சிலைகள், நரசிம்மர் சிலை ஒன்றும் கிடைத்துள்ளன.