திருப்பூர் : திருப்பூர் காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தொழில் வளம் பெருகவும், மக்கள் சுபிட்ஷமாக இருக்கவும், லட்சார்ச்சனை பூஜை, நேற்று காலை, 8:00 மணிக்கு துவங்கியது. கலச பூஜை நடத்திய நம்பூதிரிகள் குழு, தொடர்ந்து துளசி மற்றும் பூக்களை கொண்டு, அர்ச்சனை செய்தனர். அதன்பின், அன்னதானம் நடைபெற்றது. லட்சார்ச்சனை பூஜை, இன்று மாலை நிறைவடைகிறது.