பதிவு செய்த நாள்
19
டிச
2015
01:12
குன்னுார்: குன்னுார் சின்ன திருப்பதி பாலாஜி கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா
நடக்கிறது.
குன்னுார் பெரிய வண்டிச்சோலையில் எழுந்தருளியுள்ள சின்ன திருப்பதி பாலாஜி கோவிலில்,
வரும், 21ம் தேதி மகா வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்படுகிறது. அதிகாலை, 4:00
மணிக்கு நிர்மால்ய தரிசனம், சிறப்பு பூஜை, சொர்க்கவாசல் திறப்பு, சிறப்பு வழிபாடு, அஷ்ட
திரவிய மகா கணபதி ஹோமம், கலச பூஜை, கலசாபிஷேகம், மகா அபிஷேகம், அன்னதானம், மகா தீபாராதனை ஆகியவை நடக்கின்றன.
இதற்காக, கோவில் குரு ரஞ்சி கிருஷ்ணாசாமி, ஆஸ்ரம மடாதிபதி சொருபானந்தா சரஸ்வதி
தலைமையில், அர்ஜுணன், ராமசந்திரன், சீனிவாசன், கலை செல்வன், கிருஷ்ணமூர்த்தி,
சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில், ஹேம்சந்த், மோகன், சிவக்குமார், கோமதி ஆகியோர் அடங்கிய, விழா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.