பதிவு செய்த நாள்
22
டிச
2015
11:12
தியாகதுருகம்: தியாகதுருகம் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடந்தது. தியாகதுருகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் மார்கழி மாத முதல் தேதியில் இருந்து சிறப்பு பூஜைகள் துவங்கியது. தினமும் மூலவர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும் பஜனையும் நடந்தது. நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்ட அதிகாலை 3:00 மணிக்கு திருமஞ்சன அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. அதைத் தொடர்ந்து காலை 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனுவாசபெருமாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் சுவாமி திருவீதியுலா நடந்தது.
சமுதாய பராமரிப்பு கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்திபிள்ளை, தி.மு.க., அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், ரங்கராஜிலு, பேரூராட்சி தலைவர் விஜயாராஜூ, அ.தி.மு.க., நகர செயலாளர் ஷியாம்சுந்தர், துளுவவேளாளர் சங்க தலைவர் கண்ணன், ஆரிய வைசிய சங்க தலைவர் அபரஞ்சி, பிச்சாண்டிபிள்ளை, நல்லாப்பிள்ளை, வேலு எலக்டிரிக்கல்ஸ் உரிமையாளர் சிவக்குமார், தே.மு.தி.க., அவைத்தலைவர் கோவிமுருகன், நகர செயலாளர் முருகன், வள்ளியம்மாள் பள்ளி முதல்வர் சுரேஷ், டாக்டர் நடேசன், தனமூர்த்தி அறக்கட்டளை தலைவர் பழனிவேல், கூட்டுறவு சங்க செயலாளர்கள் ராஜேந்திரன், பாலாஜி, முருகன், பா.ஜ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர், சுகுமாறன் உள்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று, கோவிலில் அன்னதானம் நடக்கிறது.
விழுப்புரம்: வைகுண்ட ஏகாதசியையொட்டி விழுப்புரம் வைகுண்டவாசபெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. வைகுண்ட ஏகாதசியை யொட்டி விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நடந்தது. தொடர்ந்து 5:30 மணிக்கு மகா தீபாராதனை, 6:00 மணிக்கு ஸ்ரீ ஜனகவல்லி சமேத வைகுண்டவாச பெருமாள் கோவில் உள்புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்துலட்சுமி, அர்ச்சகர் வாசு பட்டாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.