Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிவெள்ளியில் அம்மன் அருள் பெறுவோம்! ரமலான் சிந்தனைகள்- 5 : பாவம் தீர்க்கும் நோன்பு ரமலான் சிந்தனைகள்- 5 : பாவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 ஆக
2011
10:08

அழகர்கோவில் : அழகர்கோயில் சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆக., 13ல் தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான அங்குரார்பணம் 4ம்தேதி நடந்தது. 5ம்தேதி காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இதற்காக காலை எட்டு மணிக்கு சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் கொடி மேடை முன் எழுந்தருளினார்.

அனுமார் திருஉருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, தீப ஆராதனை நடந்தது. பின் பெருமாளுக்கு பல்வேறு ஆராதனைகள் நடந்தன. காலை 10.20 மணிக்கு தேர் பணிகள் துவங்குவதற்காக, அங்கு முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. இரவு அன்ன வாகனத்தில் புறப்பட்ட பெருமாள் கோயிலை வலம் வந்தார். 6ம் தேதி முதல் தினமும் காலையில் பல்லக்கிலும், இரவில் முறையே சிம்மம், அனுமார், கருடன், சேஷம், யானை, குதிரை, பூச்சப்பரத்தில் புறப்படும் பெருமாள் கோயிலை வலம் வருவார்.

தேரோட்டம் ஆக., 13ல் காலை 8.30 மணிக்கு மேல் ஒன்பது மணிக்குள் நடக்கிறது. அன்று இரவு பூப்பல்லக்கில் எழுந்தருளும் சுந்தரராஜ பெருமாள் தேரோடும் பாதை வழியாக, கோட்டை வாயிலை சுற்றி வலம் வருவார். ஆக. 14ல் திருவிழா சாற்றுமுறையும், மறுநாள் உற்சவ சாந்தியும் நடக்கிறது. பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், மதுரை மண்டல இணை கமிஷனர் சுதர்சன், துணை கமிஷனர் செல்வராஜ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar