திண்டுக்கல்: திண்டுக்கல் வடக்கு மேட்டுராஜாக்காபட்டியில் ஜயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடந்தது.அதிகாலை ஜயப்ப சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜையும் நடந்தது. ஜயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஜயப்ப சுவாமி வழிபாட்டுக்குழுவினர் செய்தனர்.