கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள நடராஜர், சிவகாம சுந்தரிக்கு ஆருத்ரா தரிசனத்தையொட்டி காலை 5:00 மணிக்கு ஸ்பன பூஜையுடன் அபிஷேகம் நடந்தது. 8:00 மணிக்கு பாடலீஸ்வரர், பெரிய நாயகி அம்மனுக்கு மார்கழி மாத பூஜை நடந்தது. நடராஜர், சிவகாம சுந்தரி ஆனந்த தாண்டவமாடி ஆருத்ரா தரிசனம் நடந்தது. தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடந்தது. சுவாமி கோவிலை வந்தடைந்ததும் சிவகர குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. நடராஜர், சிவகாம சுந்தரி ஊடல் நிகழ்ச்சியை தொடர்ந்து திருமணம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவி லில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிவகாமசுந்தரிக்கும் நடராஜமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். நடராஜமூர்த்தி ஆனந்த தாண்டவம் ஆடியபடி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.