பதிவு செய்த நாள்
31
டிச
2015
10:12
திருப்பதி: தான் பெற்ற, ஆசை மகன் நினைவாக, தந்தை ஒருவர், கோவில் கட்டி, பூஜை செய்து வருகிறார்.தெலுங்கானா கட்சியைச் சேர்ந்த, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், மடிக்கி கிராமத்தில் வசித்து வரும், அத்திலி ராம்பாபு - வெங்கட சத்யவேணி தம்பதிக்கு, இரண்டு மகன்கள். அவர்களில், மூத்த மகன், நரேஷ் கடந்தாண்டு, உடல் நல குறைவால் மரணமடைந்தார்.தான் பெற்ற மகன், 12 வயதிலேயே உயிரிழந்ததால், அதை தாங்கி கொள்ள முடியாமல், இருவரும் மனமுடைந்தனர். அதனால், தன் மகனின் நினைவாக, ஏதாவது செய்ய முடிவு எடுத்தனர். அதனால், தங்களின் விவசாய நிலத்தில், மகன் நினைவாக, சிறிய கோவில் கட்டி, அங்கு தினசரி பூஜை செய்து வருகின்றனர்.