தேவிபட்டினம் நவபாஷாணம் பக்தர்களின் வருகை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2015 10:12
தேவிபட்டினம்: தேவிபட்டினத்தில் அமைந்துள்ள நவபாஷாணம் மிகவும் பிரசித்திபெற்றது. இங்கு திருமண தடை, முன்னோர் களுக்கு தர்ப்பணம், ஏவல், தோஷ நிவர்த்தி உள்ளிட்டவைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. இதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது ஐயப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்லும் பெண் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இவர்கள் நவகிரகங்களை சுற்றிவந்து வழிபாடு செய்துவிட்டு திரும்புகின்றனர். இதனால் நவபாஷாணம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பிவழிகிறது. இந்து அறநிலைத்துறை பொறுப்பேற்றபின் நவபாஷாணம் செல்ல வசூலிக்கப்பட்ட கட்டணம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் மகிழ்சியடைந்துள்ளனர்.