நத்தம்: சொரிப்பாளையத்தில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்க கோரி கோயிலில் மாவிளக்கு பூஜை நடத்தினர். நத்தம் அருகே உள்ள சொரிப்பாளையத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடந்து வந்தது. சமீபகாலமாக உச்சநீதி மன்றத்தின் தடை காரணமாக, ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை நீடிக்கிறது. இதனால், சுற்றுப்பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர், காளைகளை வளர்த்துக்கொண்டு, ஏமாற்றம் அடைந்துள்ளனர். வரும் ஆண்டிலாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்க வேண்டுமென கூறி, அங்குள்ள பாலமுருகன் கோயிலில் திரளான மக்கள் மாவிளக்கு எடுத்து சிறப்பு பூஜை செய்தனர்.