பதிவு செய்த நாள்
31
டிச
2015
06:12
தூத்துக்குடி: ஆங்கிலபுத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அனைத்து பகுதியில் இருந்தும் மக்கள் கோவில்களுக்கு வருகை அதிகரித்து வருகிறது. ஆங்கில புத்தாண்டு தினத்தில் கோவில்களுக்கு வருவதால், அந்த ஆண்டு முழுவதும், இறைவன் அருள் கிடைக்கும், என, பக்தர்கள் நம்பி வருகின்றனர். விடுமுறை தினமாகவும், வெள்ளிக்கிழமை புத்தாண்டு பிறப்பதால், பக்தர்கள் கோவில்களுக்கு வருகை அதிகரித்து வருகிறது.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதமிருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் அதிகரித்து வருகின்றனர். புத்தாண்டு தினமான ஜன. 1ல் அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்படவுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன், முருகன் கோவிலில் குவிந்து வருகின்றனர். ஐயப்ப பக்தர்கள் கூட்டமும் அதிகரித்துள்ளது. இதேபோல் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில், குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவில், நவ திருப்பதி கோவில்கள், தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் கோவில், சிவன் கோவிலுக்கும் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. அனைத்து கோவில்களிலும் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரங்கள் நடக்கின்றன.