முடிந்தது 2015 - பிறந்தது 2016.. கோயில்களில் சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2016 11:01
புதிய சிந்தனைகள், எதிர்பார்ப்புகள், நம்பிக்கையோடு பிறந்துவிட்டது. புத்தாண்டு (2016) உலகம் முழுவதும் முக்கிய நகரங்களில் வாண வேடிக்கையுடன் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர், 2015-ம் ஆண்டு நிறைவடைந்து 2016-ம் ஆண்டு துவங்கியது, புத்தாண்டு பிறந்ததையொட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஆடல் பாடல்
கொண்டாட்டம் என களைகட்டியது, தமிழகத்தில் சர்ச், கோயில்களில் பொதுமக்கள்
சிறப்பு வழிபாடு நடந்தது. ஒருவரையொருவர் புத்தாண்டு வாழ்த்தினை
பரிமாறிக்கொண்டனர்.
முன்னதாக ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வாண வேடிக்கையுடன் புத்தாண்டை ஆடல் பாடலுடன் அந்நகர மக்கள் வரவேற்றனர். நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் வாண வெடி வெடித்து புத்தாண்டை இனிதே வரவேற்றனர். தைவான் தலைநகர் தைப்பே நகரில் உயரமான கட்டடம் ஒன்றில் வண்ண வாண வேடிக்கையுடன் புத்தாண்டை கொண்டாடினர். தாய்லாந்திலும் புத்தாண்டையொட்டி பட்டாசு வெடித்து அந்நாட்டு மக்கள் கொண்டாடினர்.